புகலூரில்-நடந்து சென்ற மூதாட்டி மீது பள்ளி வேன் மோதி விபத்து.
புகலூரில்-நடந்து சென்ற மூதாட்டி மீது பள்ளி வேன் மோதி விபத்து. கரூர் மாவட்டம், புகலூர் தாலுக்கா, காட்டூர் மேற்கு தெருவை சேர்ந்தவர் கண்டியண்ணன் மனைவி பாவாயி வயது 70. இவர் ஜூலை 22 ஆம் தேதி காலை 9 மணி அளவில் புகலூர் நான்கு ரோடு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது நாமக்கல் மாவட்டம் , பரமத்தி வேலூர் , செட்டியார் தெருவை சேர்ந்த பழனியப்பன் வயது 58 என்பவர் ஓட்டி வந்த பள்ளி வேன் பாவாய் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பாவாயிக்கு இரண்டு கால்களிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதித்தனர். மூதாட்டி பாவாயி-ன் பேரன் பாஸ்கர் வயது 42 அளித்த புகாரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் பள்ளி வேனை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பழனியப்பன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.
Next Story




