நாமகிரிப்பேட்டை பகுதியில் மின்சார நிறுத்தம் அறிவிப்பு..

X
Rasipuram King 24x7 |23 July 2025 6:10 PM ISTநாமகிரிப்பேட்டை பகுதியில் மின்சார நிறுத்தம் அறிவிப்பு..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை பகுதியில் வியாழக்கிழமை(24.7.25) துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது என செயற்பொறியாளர் ஆர்.கே.சுந்தரராஜன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி நாமகிரிப்பேட்டை, குரங்காத்துப் பள்ளம்,கோரையாறு,மூலப்பள்ளிப்பட்டி, தண்ணீர் பந்தல் காடு, அரியாக் கவுண்டம்பட்டி, பழனியப்பனூர், பச்சுடையாம் பாளையம், தொ.ஜேடர்பாளையம், வெள்ளக்கல்பட்டி, புதுப்பட்டி,சீராப்பள்ளி,காக்காவேரி, பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் ஏற்படும் என தெரிவித்துள்ளனர். எனவே பொதுமக்கள் தகுந்த ஏற்பாட்டினை செய்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர்.
Next Story
