கரூர்- தடகளப் போட்டி நிர்வாகத்தில் முறைகேட்டால் பரபரப்பு.

கரூர்- தடகளப் போட்டி நிர்வாகத்தில் முறைகேட்டால் பரபரப்பு.
கரூர்- தடகளப் போட்டி நிர்வாகத்தில் முறைகேட்டால் பரபரப்பு. கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வேலம்மாள் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் சி.பி.எஸ்.சி பள்ளிகளுக்கான மாநில அளவிலான தடகள போட்டிகள் கடந்த 19ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இதில் ஒவ்வொரு மாணவ, மாணவிகளுக்கும் தங்கும் வசதி, உணவிற்காக பணம் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. அதில் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள், திரும்பிச் செல்லும் போது அவர்கள் பயன்படுத்தாத உணவு டோக்கன்களை திருப்பிக் கொடுத்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என விதியில் குறிப்பிட்டு இருந்த நிலையில், டோக்கன்களை திரும்ப கொடுத்து பணம் கேட்டால் நிர்வாகம் கொடுக்க மறுப்பதாக விளையாட்டு ஆசிரியர்கள் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக அங்கு வந்த போலீசார் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். வேண்டிய பள்ளிகளுக்கு மட்டும் பணம் வழங்கி விட்டு, பெரும்பாலான பள்ளிகளுக்கு பணம் திருப்பி தரவில்லை என விளையாட்டு போட்டி ஆசிரியர்கள் குற்றம் சாட்டினர்.இதனால் மாவட்ட விளையாட்டு அரங்கில் பரபரப்பு காணப்பட்டது.
Next Story