பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு அனுமதியின்றி டிராக்டரில் கிராவல் மண் திருடிய இரண்டு நபர்களை கைது
சட்டவிரோதமாக மணல் திருட்டு, கள்ளச்சாராயம், கஞ்சா, போன்ற போதைப்பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் பற்றிய விவரங்கள் தெரிந்தால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும் தகவல் தெரிவிப்பவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இரகசியம் காக்கப்படும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு அனுமதியின்றி டிராக்டரில் கிராவல் மண் திருடிய இரண்டு நபர்களை கைது பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு உட்கோட்டம் குன்னம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்று 23.07.2025 டிராக்டரில் மணல் திருடுவதாக கிடைத்த இரகசிய தகவலின்படி குன்னம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் அவரது குழுவினர் குன்னம் பகுதியில் சிறப்பு ரோந்து மேற்கொண்ட போது அரியலூர் to பெரம்பலூர் ரோட்டு குன்னம் IOB வங்கி அருகே 2 டிராக்டரில் கிராவல் மண் திருடிக்கொண்டு வந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரித்தபோது 1.செந்தில் 40/25 த/பெ ரெங்கன், குன்னம்,பெரம்பலூர் மாவட்டம். 2.அசோகன் 40/25 த/பெ உலகநாதன்,நடுத்தெரு, குன்னம், பெரம்பலூர் மாவட்டம்.* ஆகியோர்கள் என்பது தெரியவர மேற்படி இரண்டு நபர்களை கைது செய்து, இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து மேற்படி எதிரிகளிடமிருந்து ரூபாய் 15000/- மதிப்புள்ள 3 யுனிட் கிராவல் மண் மற்றும் டிராக்டரும், பறிமுதல் செய்த குன்னம் காவல்நிலைய காவல்துறையினர் மேற்படி எதிரிகள் இருவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தங்களது பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் திருட்டு, கள்ளச்சாராயம், கஞ்சா, போன்ற போதைப்பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் பற்றிய விவரங்கள் தெரிந்தால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும் தகவல் தெரிவிப்பவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இரகசியம் காக்கப்படும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
Next Story





