சுதந்திர போராட்ட வீரர் தியாகிடாக்டர் பி.வரதராஜூலு நாயுடு நினைவு தினம் ..

சுதந்திர போராட்ட வீரர் தியாகிடாக்டர் பி.வரதராஜூலு நாயுடு நினைவு தினம் ..
X
சுதந்திர போராட்ட வீரர் தியாகிடாக்டர் பி.வரதராஜூலு நாயுடு நினைவு தினம் ..
சுதந்திர போராட்ட கால வீரரும் தியாகியுமான டாக்டர் பி.வரதராஜூலு நாயுடு நினைவு தினம் ராசிபுரத்தில் புதன்கிழமை நடைபெற்றது. சுதந்திர போராட்ட காலங்களில் மகாத்மா காந்தி, வ.உ.சி., பாரதியார், ராஜாஜி, காமராஜர் போன்ற தலைவர்களுடன் இணைந்து செயல்பட்டவர். சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் இருந்தவர். சிறந்த பத்திரிகையாளர். இவரது நினைவு தினமான ஜூலை.23-ல் அவரது சொந்த ஊரான ராசிபுரம் நகரில் விடுதலை களம் கட்சியின் சார்பில் நினைவு தினம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விடுதலை களம் கட்சியின் நிறுவனர் கொ.நாகராஜன் தலைமையில் பலரும் அவரது திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில், கட்சியின் நாமக்கல் வடக்கு மாவட்டச் செயலாளர் சரவணன், ராசிபுரம் பி.மோகன், பிள்ளப்பநாயக்கனூர் ரமேஷ், இதயகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Next Story