வேப்பனப்பள்ளி அருகே ஆங்கிலப் பாட ஆசிரியா் போக்சோவில் கைது.

X
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 80 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். 6 ஆசிரியா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்த பள்ளியில் ஆங்கிலப்பாடபட்டதாரி ஆசிரியராக பாலகிருஷ்ணன் (50) பணியாற்றி வருகிறார். இவா் கடந்த 22-ஆம் இங்கு படிக்கும் சில மாணவிகளை பாலியல் சீண்டல் செய்ததாக பாதிக்கப்பட்ட மாணவிகள் 1098 என்ற எண்ணை தொடா்புகொண்டு புகார் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, அலுவலர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி மாணவிகளிடம் நேற்று நேரில் விசாரணை நடத்தினர்.அதில் மாணவிகள் அளித்த புகார் உண்மை என தெரியவந்ததை அடுத்து கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் அதன் பேரில் போலீசார், ஆசிரியா் பாலகிருஷ்ணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
Next Story

