கரூர்- சாலையின் குறுக்கே திடீரென நடந்ததால்,டூ வீலர் மோதி விபத்து.

கரூர்- சாலையின் குறுக்கே திடீரென நடந்ததால்,டூ வீலர் மோதி விபத்து.
கரூர்- சாலையின் குறுக்கே திடீரென நடந்ததால்,டூ வீலர் மோதி விபத்து. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காம்புலியூர் பகுதியை சேர்ந்தவர் மதிவாணன் வயது 56. இவர் ஜூலை 23ஆம் தேதி காலை 10 மணி அளவில் கரூர் - கோவை சாலையில் அவரது டூவீலரில் சென்றார், இவரது வாகனம் எல் ஜி பி பெட்ரோல் பங்க் எதிரே வந்த போது திடீரென அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சாலையின் குறுக்கே நடந்து சென்றதால் வாகனத்தை கட்டுப்படுத்த முயன்றும் முடியாமல் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் மதிவாணனுக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு உடனடியாக அவரை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த மதிவாணனின் சகோதரி கிருஷ்ணவேனி வயது 40 என்பவர் அளித்த புகாரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கரூர் மாநகர காவல் துறையினர்.
Next Story