மக்களின் அடிப்படை தேவைக்கு முன்னுரிமை

X
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளக்குறிச்சி, உளுந்துார்பேட்டை, திருக்கோவிலுார் ஆகிய நகராட்சிகள் மற்றும் சின்னசேலம், மணலுார்பேட்டை, தியாகதுருகம், வடக்கனந்தல், சங்கராபுரம் ஆகிய பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் திட்ட பணிகள், திடக்கழிவு மேலாண்மை திட்டம், நகர்ப்புற மேம்பாட்டு திட்டம், சாலை மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும் முடிவுற்ற திட்ட பணிகளின் விபரம், முடிவுற்ற பணிகளின் பராமரிப்பு, பொதுமக்களின் பயன்பாடு, நிலுவை பணிகள், திட்ட மதிப்பீடு, புதிய திட்ட பணிகள் குறித்தும் ஆலோசனை நடந்தது.
Next Story

