இளம் பெண் மாயம். தந்தை புகார்

இளம் பெண் மாயம். தந்தை புகார்
X
மதுரை உசிலம்பட்டி அருகே இளம் பெண் மாயம் என அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அயோத்தி பட்டியை சேர்ந்த சிவாவின் மகள் ஜனனி (20) என்பவர் கடந்த 21ஆம் தேதி இரவு 7 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரை நண்பர்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் இவரது தந்தை நேற்று (ஜூலை.23) மதியம் சேடப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.
Next Story