அரளி விதை சாப்பிட்டு பெண் தற்கொலை

X
மதுரை மேலூர் அருகே கிடாரிப்பட்டி அழகாபுரியைச் சேர்ந்த பாண்டியனின் மனைவி உமா( 40) என்பவர் வயிற்று வலியால் கடந்த சில வருடங்களாக அவதிப்பட்டு வந்த நிலையில் அதற்கு சிகிச்சை பெற்று பயனில்லாமல் மனவிரத்தியில் கடந்த 20ஆம் தேதி மதியம் 2.30 மணி அளவில் தெற்குன்றம்பட்டி அழகர்சாமி தென்னந்தோப்பில் அரளி விதையை சாப்பிட்டு மயங்கி கிடந்துள்ளார். இதனை கண்டவர்கள் அவரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (ஜூலை .23) மதியம் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது கணவர் பாண்டி மேலவளவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு விசாரிக்கின்றனர்.
Next Story

