ராமநாதபுரம் பாதுகாப்பு வேண்டி மாவட்ட ஆட்சியர் குடும்பத்தினர் மனு

திருவிழா வரவு செலவு கணக்கு கேட்டத்தில் ஒரே சமூகத்தை சேர்ந்த இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்சனையில் 15 குடும்பத்தை ஊர் விலக்கி வைத்ததாக புகார் பாதுகாப்பு வழங்க கோரி ஆட்சியரிடம் மனு
ராமநாதபுரம் மாவட்டம் திருவிழா வரவு செலவு கணக்கு கேட்டத்தில் ஒரே சமூகத்தை சேர்ந்த இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்சனையில் 15 குடும்பத்தை ஊர் விலக்கி வைத்ததாக புகார்: பாதுகாப்பு வழங்க கோரி ஆட்சியரிடம் மனு அளித்தனர் முளைகொட்டு திருவிழா நடத்தியது தொடர்பாக கணக்கு கேட்டதால் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில் ஒரே சமூகத்தை சேர்ந்த 15 குடும்பத்தை ஊர் விலக்கி வைத்திருப்பதாகவும், நடைபெற உள்ள முளைக்கொட்டு திருவிழாவின் போது 15 குடும்பத்தை சேர்ந்தவர்களை தாக்க திட்டமிட்டிருப்பதால் பாதுகாப்பு வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா நல்லிருக்கை கிராமத்தில் பல சமூகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இந் நிலையில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்த 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்காக தனியாக சங்க மடம், முளைக்கொட்டு திண்ணை ஆகியவை உ மக்கள் வரிப்பணத்தில் பொதுவாக கட்டி ஆண்டுதோறும் திருவிழாக்கள் நடத்தி வரும் நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு முளைகொட்டு திருவிழா நடத்த திட்டமிட்டு அது தொடர்பாக கூட்டம் நடத்திய போது கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற திருவிழாவில் வசூலிக்கப்பட்ட தொகை அதற்கு முன்பாக சங்கத்தில் இருந்த பொது பணம் தொடர்பாக கணக்கு கேட்டதில் ஒரே சமூகமான தேவேந்திர குல சமூகத்தை சேர்ந்த இரு பிரிவினர் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட 15 குடும்பத்தை மட்டும் விலக்கி விட்டதாக கூறப்படும் நிலையில், 15 குடும்பங்களிடம் அடிக்கடி பிரச்சனை செய்து வருவதாகவும், தற்போது நடைபெற உள்ள இந்த ஆண்டு முளைக்கட்டு விழாவிற்கு இவர்களிடம் வரி வசூல் செய்யாமல் திருவிழாவின் போது இரவு நேரத்தில் இவர்களை மற்றொரு தரப்பினர் தாக்க திட்டமிட்டிருப்பதாக இந்த 15 குடும்பத்திற்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
Next Story