ராமநாதபுரம் கோவில் திருவிழா முன்னிட்டு பால்குடவுளம் ஊர்வலம் நடைபெற்றது

காடமங்கலம் கிராமத்தில் ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ கருப்பணசாமி கோவில் மண்டல பூஜை விழாவை முன்னிட்டு 208 பால்குடம் ஊர்வலம்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள காடமங்கலம் கிராமத்தில் அருள் பாலிக்கும் ஸ்ரீ காளியம்மன் ,ஸ்ரீ கருப்பணசாமி கோவில் கும்பாபிஷேகம் விழா கடந்த மாதம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று 48வது மண்டல பூஜை விழாவையொட்டி ஸ்ரீமுத்தாலம்மன் ஆலயத்தில் இருந்து ஊரின் முக்கிய வீதிகள் வழியாக 200க்கும் மேற்பட்ட பெண்கள் விவசாயம் செழிக்கவும், பருவ மழை பெய்ய வேண்டியும் பால்குடம் எடுத்து தலையில் சுமந்து ஊர்வலமாக வந்து ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீகருப்பணசாமி கோவிலை வந்தடைந்தனர். பின்னர் ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீகருப்பணசாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டு பக்தர்கள் கொண்டு வந்த பாலால் சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்பு தீபாரதனை காண்பிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. கிராமத்தின் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story