ராமநாதபுரம் அதிமுக சார்பில் ஆலோசனை நடைபெற்றது

X
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமியின் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் மக்கள் சந்திப்பு பிரச்சாரத்திற்கு முதுகுளத்தூர் வருகையையொட்டி 10 ஆயிரம் பேர் பங்கேற்க ஏற்பாடிகளை செய்ய வேண்டும் என கமுதியில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கத்துடன் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் வரும் 30ம் தேதியும், 31ல் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியிலும் பங்கேற்க உள்ளார். இதுதொடர்பாக கமுதியில் தேவர் திருமண மண்டபத்தில் கமுதி மேற்கு ஒன்றியம் மற்றும் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமையில் ஆலைúôசனைக் கூட்டம் நடைபெற்றது. மேற்கு ஒன்றிய செயலாளர் கருமலையான், வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், முன்னாள் பரமக்குடி சட்டப் பேரவை உறுப்பினர் முத்தையா, ஒன்றிய அவைத் தலைவர் சேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் ஒரு வாக்கு சாவடிக்கு குறைந்தது 200 பேர் வீதம் பத்தாயிரம் பேர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் திரளான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
Next Story

