முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த பக்தர்கள்

முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த பக்தர்கள்
X
மதுரையில் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்
மதுரை அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயிலில் இன்று (24.07.2025 ) வியாழக்கிழமை ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தார்கள். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இது போல மீனாட்சி அம்மன் கோயில், திருவாப்புடையார் கோயில், முத்தீஸ்வரர் கோயில் மற்றும் வைகையாற்று பகுதியில் உள்ள ஓபளா படித்துறை ஆகிய பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் தங்கள் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தனர்.
Next Story