சோளிங்கரில் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் மீது கல்வீச்சு

சோளிங்கரில் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் மீது கல்வீச்சு
X
சோளிங்கரில் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் மீது கல்வீச்சு
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து மைசூரு வரை செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. நேற்று காலை 7.15 மணியளவில் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த தலங்கை அருகே வந்தபோது அதன் சி5 கோச், இருக்கை எண் 45 மற்றும் 46 அமைந்துள்ள ஜன்னல் கண்ணாடி மீது சரமாரியாக கற்கள் வந்து விழுந்தது. இதனால் பெட்டியின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. இதுதொடர்பாக ரயில் என்ஜின் டிரைவர் காட்பாடி ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் காட்பாடிக்கு வந்து நின்ற சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் சி5 பெட்டியை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஆய்வு செய்தனர். அதைத்தொடர்ந்து தலங்கை ரயில் நிலையம் அருகில் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.மேலும் இது குறித்து காட்பாடி ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெயில் மீது கல்வீசியது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story