மருத்துவ நிதி உதவி வழங்கிய சேடப்பட்டி மணிமாறன்.

X
மதுரை திருமங்கலம் கள்ளிக்குடி வடக்கு ஒன்றியம் அரசபட்டியில் நேற்று (ஜூலை.23) இரவு நடைபெற்ற கலைஞர் அவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கள்ளிக்குடி ஒன்றியம் டி.அரசபட்டி கிராமத்தைச் சேர்ந்த பெற்றோர் பாண்டி - போதும் பொண்ணு அவர்கள் 16-வயதுடைய அவர்களின் மகன் கௌதம் என்பவரின் பார்வைக் குறைபாட்டிற்காக சிகிச்சை மேற்கொள்வதற்காக மருத்துவ நிதிஉதவி வேண்டி மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறனிடம் கோரிக்கை வைத்தார்கள். உடனடியாக மருத்துவ செலவிற்காக தனது சொந்த நிதியிலிருந்து ரூபாய் 50,000 பணத்தை சேடப்பட்டி மணிமாறன் வழங்கினார். உடன் மாவட்ட நிர்வாகிகள் இருந்தனர்.
Next Story

