கோவையில் ஆகம விதிகள் மீறல் -பாஜக உறுப்பினர் தர்ணா போராட்டம்!
கோவை பேரூரில் உள்ள பிரசித்தி பெற்ற பட்டீஸ்வரர் கோவிலில், நடை சாத்திய பிறகு போலீஸ் அதிகாரி எஸ்.பி. பாண்டியராஜன் சாமி தரிசனம் செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை ஆகம விதிகளை மீறியதாக புகார்கள் எழுந்துள்ளன. சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகின்ற நிலையில், பாஜக உறுப்பினர் அர்ஜுனன், கோவில் வாயிலில் கருப்பு துணி கட்டி அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Next Story



