அரசு நகரப் பேருந்துகள் பழுதடைந்ததால் பயணிகள் அவதி !
கோவை சிவானந்தா காலனி பகுதியில் இருந்து இயக்கப்படும் அரசு நகரப் பேருந்து, நேற்று மின் கோளாறு காரணமாக ஸ்டார்ட் ஆகாமல் பழுதடைந்தது. இதனால், அதில் பயணம் செய்தவர்கள் தள்ளிச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர். பலர் வேறு பேருந்துகளில் ஏறிச் சென்றனர். இதேபோன்று ஒத்தக்கால் மண்டபத்தில் மற்றொரு அரசு பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டது. இரவு நேரங்களில் தொடர்ச்சியாக ஏற்படும் பழுதுகள் காரணமாக, அரசு பேருந்துகள், நரகப் பேருந்துகளாக மாறுகின்றன என பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
Next Story



