கோவை குற்றாலம் வெள்ளப்பெருக்கால் மூடல்: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

கோவை குற்றாலத்தில் தொடர்ந்து பெய்யும் மழையால் அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கோவை குற்றாலத்தில் தொடர்ந்து பெய்யும் மழையால் அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நீராடுவதற்கும், சுற்றிப் பார்ப்பதற்கும் அனுமதிக்கப்படவில்லை. வெள்ள அபாயம் காரணமாக, சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பிற்காக கோவை குற்றாலம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மழை தொடரும் நிலையில், எப்போது வேண்டுமானாலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் அங்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று வந்த பல சுற்றுலா பயணிகள் அனுமதி அளிக்கப்படாததால் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.
Next Story