பேரூர் கோவிலில் ஆகம விதி மீறல்: உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஹிந்து முன்னணியின் கோரிக்கை

அறநிலைத்துறை அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ஹிந்து முன்னணியின் மாநில நிர்வாக குழு புகார்.
பிரசித்தி பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் கடந்த 20-ம் தேதி நடைத்திறப்பு நேரத்தை கடந்த பிறகு, ஒருவர் தனிப்பட்ட முறையில் தரிசனம் செய்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.இது ஆகம விதிகளுக்கு முற்றிலும் எதிரானது என்றும், இந்த செயலில் தொடர்புடைய அறநிலைத்துறை அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ஹிந்து முன்னணியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் சதீஷ் நேற்று வலியுறுத்தினார். இதுகுறித்து பேசிய அவர், அந்த இரவில் நடை சாத்திய பிறகு, யாரோ ஒரு தனிநபருக்காக மீண்டும் கோவில் நடைகள் திறக்கப்பட்டுள்ளன. இது நடைமுறையிலும், ஆன்மிக ரீதியிலும் மிகவும் தவறு. சம்பவத்தில் ஈடுபட்ட அதிகாரிகளை உடனடியாக பணிவிடை நீக்கம் செய்ய வேண்டும் என கோரி, இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம் என தெரிவித்தார்.
Next Story