பேரூர் கோவிலில் ஆகம விதி மீறல்: சிவனடியார் அமைப்பினர் புகார் !
கோவை,பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் கடந்த 20-ஆம் தேதி இரவு, கோவில் நடை மூடப்பட்ட பிறகு ஒரு உயர் போலீஸ் அதிகாரிக்கு தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஒருங்கிணைந்த சிவனடியார்கள் திருக்கூட்டம் அமைப்பினர் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தனர். அமைப்பின் தலைவர் மாணிக்கவாசகம் தெரிவித்ததாவது, இது கோவிலின் ஆகம விதிகளை மீறும் செயல். இனி இதுபோன்ற நிகழ்வுகள் நடக்க அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தினார்.
Next Story



