இன்னர்வீல் கிளப் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

இன்னர்வீல் கிளப் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா
X
துாத்துக்குடி ஸ்பிக்நகர் இன்னர் வீல் கிளப்பின் தலைவர் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.
துாத்துக்குடி அருகே உள்ள ஸ்பிக்நகர் இன்னர்வீல் கிளப்பின் 2025–2026ம் ஆண்டின் தலைவர் மற்றும் புதிய நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா நடந்தது. இந்த ஆண்டின் புதிய தலைவராக லீனா மகிமை, செயலாளராக ரம்யா பொறுப்பேற்றனர். அரவிந்த் கண் மருத்துவமனை தலைமை டாக்டர் அனிதா, முன்னாள் சேர்மன் வெயிலாராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். டாக்டர் ஆர்த்தி கண்ணன் வாழ்த்துரை வழங்கினார். நிர்வாகிகளுக்கு பல்வேறு சங்கத்தை சேர்ந்தவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். விழாவில் ரூ.1,20,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பாளர்கள் ஜூடி, பிரியா தொகுத்து வழங்கினர். செயலர் ரம்யா மாரியப்பன் நன்றி கூறினார். முன்னாள் தலைவர் செல்வி பாலசுப்பிரமணியன், செயலாளர் மீனா, மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Next Story