கிருஷ்ணராயபுரம்-முழு நேர நியாய விலை கடை திறந்து வைத்த எம் எல் ஏ.
கிருஷ்ணராயபுரம்-முழு நேர நியாய விலை கடை திறந்து வைத்த எம் எல் ஏ. கரூர் மாவட்டம் , கிருஷ்ணராயபுரம் மாரியம்மன் கோவில் தெருவில் முழு நேர நியாய விலை கடை திறப்பு விழாநடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி கலந்துகொண்டு முழுநேர ரேஷன் கடையை திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்குஅரிசி எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் கட்டளை ரவிராஜா, கிருஷ்ணராயபுரம் நகர செயலாளர் சசிகுமார்,பேரூராட்சி உறுப்பினர் ராதிகா , கூட்டுறவுத்துறை அதிகாரிகள் , பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
Next Story






