ஜோலார்பேட்டை அருகே பெயரளவிற்கு நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம்

X
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே பெயரளவிற்கு நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம் அடிப்படை வசதி இன்றி பொதுமக்கள் தவிப்பு திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள கட்டேரி பஞ்சாயத்துக்குட்பட்ட அம்மன் கோவில் அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறுவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. மாந்தோப்பில் உள்ள அம்மன் கோவில் அருகே இந்த முகாமிற்காக டெண்ட் மட்டுமே அமைக்கப்பட்டது. முகாமிற்கு காலை முதலே அப்பகுதி பொதுமக்கள் வர துவங்கினர். ஆனால் ஏற்ப்பாட்டாளர்கள் நாற்காலி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் முறையாக ஏற்ப்படுத்தவில்லை. இதனால் பொதுமக்கள் பல மணிநேரம் நின்று காத்திருந்து மனு அளித்தனர். முகாமின் முக்கிய திட்டமான மகளிர் உரிமைததொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஏராளமான பெண்கள் குவிந்த நிலையில் அவர்களுக்கு கழிவறை உள்ளிட்ட எந்த வசதியும் இல்லாததால் இயற்கை உபாதைகளுக்கு கூட ஒதுங்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். லைட் மற்றும் பேன் உள்ளிட்டவைகளை காட்சி பொருளாக மட்டும் வைத்திருந்ததால் கைக்குழந்தைகளுடன் வந்த தாய்மார்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். எந்த அடிப்படை வசதியும் முறையாக இல்லாமல் பெயரளவிற்கு நடந்த முகாமிற்கு வந்த பலரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர் இந்த முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவசௌந்தரவல்லி மற்றும் ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜ் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது
Next Story

