குற்றாலம் சாரல் திருவிழா படகு போட்டி தொடங்கியது

குற்றாலம் சாரல் திருவிழா படகு போட்டி தொடங்கியது
X
சாரல் திருவிழா படகு போட்டி தொடங்கியது
தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள குற்றாலம் சாரல் திருவிழா படகு போட்டி ஐந்தருவி செல்லும் வழியில் உள்ள வெண்ணமடை குளத்தில் நடந்தது. இந்த போட்டியை மாவட்ட சுற்றுலாத்துறை உதவி அலுவலர் சந்திரகுமார், தமிழ்நாடு ஓட்டல் மேலாளர் சுரேஷ்குமார் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இதில் பெண்களுக்கான போட்டியில் சென்னையை சேர்ந்த சந்தியா, லெட்சுமி குழுவினர் முதலிடத்தையும், குற்றாலம் ஐந்தருவி பகுதியைச் சேர்ந்த இசக்கியம்மாள், அகல்யா குழுவினர் இரண்டாமிடத்தையும், மேலமெஞ்ஞான புரத்தைச் சேர்ந்த புனிதா, கீர்த்திகா குழுவினர் 3வது இடத்தையும் பிடித்து வெற்றிபெற்றனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
Next Story