ஆடி அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்

X
ஆடி அமாவாசை முன்னிட்டு முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைய தர்ப்பணம் கொடுப்பது விசேஷமாகும். ராமேஸ்வரம், காசி போன்ற புண்ணிய இடங்களில் திதி கொடுப்பது விசேஷமாகும். ஆனால் திண்டுக்கல் நகரில் கடல், ஏரி, குளம், இல்லாத காரணத்தினால் பொது இடத்தில் பொதுமக்கள் திதி கொடுக்க முடியாத நிலை இருந்து வந்தது. இந்நிலையில் திண்டுக்கல் 108 விநாயகர் கோபால சமுத்திரக்கரையில் திதி கொடுக்கின்ற பொது மக்களின் வசதிக்காக அய்யரை வைத்து திதி கொடுக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. வரிசையாக 100க்கும் மேற்பட்ட திதி கொடுக்கக் கூடிய ஆண்கள் பெண்கள் தரையில் அமர வைக்கப்பட்டனர். அவர்கள் முன்பு இலையில் பிண்டம், தேங்காய், வாழைப்பழம், ஊதுபத்தி, சூடம், தண்ணீர், பூ, காய்கறி போன்றவை வைக்கப்பட்டிருந்தது பின்னர் மைக்கை கொண்டு அய்யர் மந்திரங்கள் சொல்ல விதி கொடுக்க வந்தவர்களும் மந்திரங்களை திருப்பி கூறினர். அதனைத் தொடர்ந்து பிண்டங்களுக்கு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து தேங்காய் பழம் உடைத்து பூ போட்டு மந்திரங்கள் சொல்லி முன்னோர்களை நினைத்து திதி கொடுத்தனர். இதேபோல் தனி தனி குழுக்களாக 300க்கும் மேற்பட்டோர் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.
Next Story

