தியாகி சுப்பிரமணிய சிவா நூற்றாண்டு நினைவு நாள் நிகழ்வு

X
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு தியாகி சுப்பிரமணிய சிவா நற்பணி நலச்சங்கம் சார்பில் வத்தலகுண்டு மண்ணில் பிறந்த சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் நூற்றாண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது இதனை யொட்டி தியாகி சுப்ரமணிய சிவா நினைவஞ்சலி பொதுக்கூட்டம் காளியம்மன் கோவில் அருகே நேற்று இரவு நடைபெற்றது இந்நிகழ்வில் பங்கேற்ற சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் தன்னார்வலர்கள் சுப்ரமணிய சிவா உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர் இதனைத் தொடர்ந்து ஸ்ரீ சிவா கலாலய பரதக்கலை மாணவிகள் பரதநாட்டியம் மூலம் தியாகி சுப்பிரமணிய சிவாவுக்கு நடன அஞ்சலி செலுத்தினர் இந்நிகழ்வில் சுப்பிரமணிய சிவா பேரன் பாலசுப்பிரமணி மற்றும் கவிஞர்கள் முல்லை நடவரசு, சுப.மாரிமுத்து ஆகியோர் பங்கேற்று சுப்பிரமணிய சிவாவுக்கு புகழ் அஞ்சலி உரை நிகழ்த்தினார் இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.
Next Story

