வேலம்பட்டி:மருத்துவ கழிவுகளால் துர்நாற்றம்- தொற்று நோய் பரவும் அபாயம்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள வேலம்பட்டி மின்வாரியம் செல்லும் சாலையில் மர்மநபர்கள் மருத்துவ கழிவுகளை கொட்டியுள்ளனர். இதனால் அந்த பகுதி முழுவதும் நெடியால் துர்நாற்றம் வீசி வருவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.மேலும் தற்போது அவ்வப்போது மழை பெய்து வருவதால் மருத்துவ களவுகளில் தண்ணீர் தேங்கி நிலத்தடி நீரில் கலந்து நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் சம்மந்தப்பட்ட சுகாதார துறையினர். நடவடிக்கை எடுத்து மருத்துவ கழிவுகளை அகற்ற வேண்டும் என்று சமுக ஆர்வலர்களின் எதிர்பார்பாக உள்ளது.
Next Story

