கோனேரிகுப்பம் உடற்பயிற்சி கூடத்தில் பழுதாகி வீணாகும் உபகரணங்கள்

காஞ்சிபுரம் ஒன்றியம், கோனேரிகுப்பம் ஊராட்சி, எச்.எஸ்., அவென்யூவில், ஆறு ஆண்டுகளுக்கு முன், 'அம்மா விளையாட்டு பூங்கா' அமைக்கப்பட்டது. இப்பூங்காவில் எச்.எஸ்., அவென்யூ மற்றும் சுற்றியுள்ள பல்வேறு நகரினர் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். சிறுவர்களும் விடுமுறை நாட்களில் விளையாட்டு உபகரணங்களில் விளையாடி வருகின்றனர். அதேபோல, உடற்பயிற்சி கூடத்தில், அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் உடற்பயிற்சி சாதனங்களை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், முறையான பராமரிப்பு இல்லாததால், லட்சக்கணக்கான ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட உடற்பயிற்சி கூடத்தில் உள்ள உபகரணங்கள் பல பழுதடைந்த நிலையில் உள்ளன. எனவே, உடற்பயிற்சி உபகரணங்களை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர, காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எச்.எஸ்., அவென்யூ பகுதி இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

