தெருக்களில் சுற்றி திரியும் கால்நடையால் விபத்து அபாயம்

தெருக்களில் சுற்றி திரியும் கால்நடையால் விபத்து அபாயம்
X
பழையசீவரம் தெருக்களில் இரவு நேரங்களில் சுற்றி திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம், பழையசீவரம் கிராமத்தில், நடுத்தெரு, பஜனை கோவில் தெரு, துர்க்கை அம்மன் கோவில் தெரு, கலைஞர் தொகுப்பு தெரு மற்றும் அம்பேத்கர் தெரு உள்ளிட்டபகுதிகளில் கால்நடை பராமரிப்போர் அதிகம் உள்ளனர். இவர்கள், மேய்ச்சல் முடிந்து வீட்டுக்கு திரும்பும் தங்களது கால்நடைகளை, கொட்டகைக்கு பதிலாக, தங்களது வீடுகளின் எதிரே உள்ள தெரு பகுதிகளில் கட்டி வைப்பதும், ஒரு சிலர் பராமரிப்பின்றி தெருவில் விட்டு விடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால், இரவு நேரங்களில் பணி முடித்து இருசக்கர வாகனங்களில் வீடு திரும்புவோர் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு அவதிக்குள்ளாகின்றனர். சில நேரங்களில் விபத்திற்குள்ளாகும் நிலை ஏற்படுவதாக புலம்புகின்றனர். எனவே, பழையசீவரத்தில் கால்நடை பராமரிப்போர் முறையாக அவைகளை கொட்டகையில் கட்டி பாதுகாக்கவும், தெருவில் விடுவதை தவிர்க்கவும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
Next Story