சிற்றுண்டி சாப்பிடாமல் பட்டினி போராட்டத்தில் பள்ளி குழந்தைகள் ஈடுபட்டனர்

சிற்றுண்டி சாப்பிடாமல் பட்டினி போராட்டத்தில் பள்ளி குழந்தைகள் ஈடுபட்டனர்
X
வத்தலகுண்டு அருகே பணிமாற்றம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியரை மீண்டும் அதே பள்ளியில் நியமனம் செய்ய வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து பள்ளி மாணவர்கள் தர்ணா போராட்டம். காலை சிற்றுண்டி சாப்பிடாமல் பட்டினி போராட்டத்தில் பள்ளி குழந்தைகள் ஈடுபட்டனர்
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு கட்டக்காமன்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 150 க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றிய விஜயா என்பவர் இப்பள்ளியில் 16 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். தற்போது இந்த பள்ளியில் இருந்து வத்தலகுண்டு அருகே உள்ள கணவாய்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை ப்பள்ளிக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். இன்று காலை மாணவ மாணவிகள் பள்ளிக்கு வந்தவுடன் அனைவரும் ஒன்று சேர்ந்து காலை உணவு உண்ணாமல் பள்ளி முன்பு உட்கார்ந்து வேண்டும் வேண்டும் எங்கள் விஜயா தலைமை ஆசிரியை மீண்டும் வேண்டும் என்று அட்டையில் எழுதியும், கோஷமிட்டனர்.பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் சமாதானப்படுத்தியும் கேட்காமல் எங்களை தாய் போல பார்த்துக் கொண்ட பள்ளிக்கு பல நற்பெயர்கள் வாங்கிக் கொடுத்த , பள்ளிக்கு புதிய கட்டிடங்கள், புதிய பாத்ரூம் வசதிகள் தனியார் பள்ளிக்கு இணையாக எங்கள் பள்ளியை தரம் உயர்த்தி பெற்றுக் கொடுத்த தலைமை ஆசிரியை விஜயா அம்மா மீண்டும் வரவேண்டும் என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளிக்கு விரைந்து வந்த மாவட்ட கல்வி அலுவலர் மாணவர்களிடையே சமாதானப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியது அடுத்து மாணவ மாணவிகள் பள்ளிக்குச் சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Next Story