மத்திகிரி அருகே டூவீலர்கள் மோதிக்கொண்டதில் கட்டிட தொழிலாளி உயிரிழப்பு.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகேயுள்ள திப்பேனஅக்ரஹாரத்தை சேர்ந்தவர் வெங் கடராஜூலு (28)கட்டிட தொழிலாளியான. இவர் நேற்று முன்தினம் பேளகொண்டப்பள்ளி ஆஞ்சநேயர் கோயில் அருகே டூவீலரில் சென்றார். அப்போது எதிரே வந்த டூவீலருடன் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த வெங்கடராஜூலுவை அங்கிருந்தவர்கள் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார். முனிரங்கா காயத்த டன் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து தொடர்பாக மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

