ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி உற்சவர் அம்மனுக்கு முத்தங்கி அலங்காரம்..

X
Rasipuram King 24x7 |24 July 2025 6:50 PM ISTஸ்ரீ அங்காள பரமேஸ்வரி உற்சவர் அம்மனுக்கு முத்தங்கி அலங்காரம்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் காட்டூர் சாலை பகுதியில் பிரசத்தி பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. கோவிலில் ஆடி அமாவாசை முன்னிட்டு அங்காள பரமேஸ்வரி மூலவர் மற்றும் உற்சவர் சாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் ஆன பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், போன்ற வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அங்காள பரமேஸ்வரி மூலவர் அம்மன் சிறப்பு அலங்காரத்திலும் அதேபோல் உற்சவர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு முத்தங்கி அலங்காரம் செய்து மலர்கள் மலர்கள் அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்களுக்கு காலை முதல் மாலை வரை அன்னதானம் வழங்கி சிறப்பித்தனர்.
Next Story
