குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச்சேவைகள் துறை யின் கீழ் இயங்கும் நிறுவனங்களுக்கு ”முன் மாதிரியான சேவை விருது பெற தகுதியான நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்

X
குழந்தைகளின் நலனை பேணிக் காக்க திறம்பட செயல்பட்டு வரும் நிறுவனங்களை அங்கீகரிப்பதற்காகவும் ஊக்குவிப்பதாகவும், ஆண்டு தோறும் "முன் மாதிரியான சேவை விருதுகள் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் இயக்குநரகம் மூலம் வழங்கப்படுகிறது. அதன்படி அரசின் கீழ் இயங்கும் குழந்தைகள் இல்லங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் கீழ் செயல்படும் குழந்தைகள் இல்லங்கள், சட்டத்திற்கு முரணாக செயல்பட்டதாக கருதப்படும் குழந்தைகளுக்கான இல்லங்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுகள் ஆகிய 4 நிறுவனங்களுக்கு தலா ரூ. 1 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.4 இலட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும். இவ்விருதுக்கு, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின்கீழ் பதிவு பெற்று செயல்படும் இல்லங்கள் முன் மாதிரியான சேவை விருதுகளுக்கான விண்ணப்பங்களை அரசு குழந்தைகள் இல்லங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் கீழ் செயல்படும் குழந்தைகள் இல்லங்கள், சட்டத்திற்கு முரணாக செயல்பட்டதாக கருதப்படும் குழந்தைகளுக்கான இல்லங்கள் என ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அவ்விண்ணப்பங்களை மாநில அளவிலான தேர்வுக்குழுவிற்கு சமர்ப்பித்து, மாவட்ட அளவிலான தேர்வுக்குழுவின் அடிப்படையில் இல்லங்கள்/நிறுவனங்களை பரிசீலனை செய்து மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்து, அவற்றில் சிறப்பாக பணியாற்றிய ஒரு குழந்தைகள் பராமரிப்பு நிறுவனத்தினை தேர்வு செய்து மாநில அளவிலான ஆய்வுக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டு, மாநில அளவிலான தேர்வுக்குழுவினரால் சிறந்த இல்லங்களை தேர்வுச் செய்யப்படும். தகுதிகள் பின்வருமாறு: 1. இளைஞர் நீதிச்சட்டம் (பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகள்) 2015-ன்கீழ் குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்கள் பதிவு செய்திருக்க வேண்டும். 2 . தொடர்ந்து ஐந்து வருட காலம் செயல்பாட்டில் இயங்கி இருக்க வேண்டும். 2. குழந்தை பராமரிப்பு நிறுவனம் மற்றும் அந்நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்கள் மீதும் மற்றும் குற்றவியல் தொடர்பான வழக்குகள் பதிவு எந்தவொரு உரிமையியல் செய்யப்பட்டிருக்கக்கூடாது. எனவே, விருதுநகர் மாவட்டத்தில் "முன் மாதிரியான சேவை விருது”- க்கு மேற்குறிப்பிட்ட தகுதிகளின் அடிப்படையில் உரிய சான்றுகளின் ஒளிநகல்களுடன் 'மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அறை எண். 503,5-வது தளம், புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விருதுநகர் -626002 என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ 31.07.2025 அன்று மாலை 5.30 மணிக்குள் சேரும் வகையில் அனுப்படவேண்டும். மேற்குறிப்பிட்ட தேதிக்கு பின்வரும் விண்ணப்பங்கள் தகவலின்றி நிராகரிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
Next Story

