சிவகாசி வட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு

X
விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டத்தில், பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி, விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், வெள்ளூர் கிராமத்தில் நடைபெற்று வரும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து, மனுக்கள் பதிவேற்றம் செய்வது, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு பிரிவுகள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, அலுவலர்களுக்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார். அதனை தொடர்ந்து, வெள்ளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும், உணவு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம் குறித்தும், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தல் நடைபெற்று வருவதையும் ஆய்வு செய்தார். பின்னர், பூவநாதபுரம் விலக்கு முதல் வடமலாபுரம் வரை சுமார் 10 கி.மீ. தூரத்தில் ரூ.120 கோடி மதிப்பில் சுற்றுச்சாலை பணிகள் மற்றும் பாலங்கள் கட்டப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடிப்பதற்கும் சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது, அரசின் மூலம் ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகள் மற்றும் நலத்திட்டங்கள் முறையாக மக்களை சென்றடைகிறதா என பொதுமக்கள் மற்றும் பயனாளிகளிடம் கலந்துரையாடி, அவர்களின் கருத்துக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் கேட்டறிந்தார். மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென தொடர்புடைய அரசு அலுவலர்களை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
Next Story

