வளையாபாளையம்- காதல் மனைவியுடன் தகராறு இளைஞர் தற்கொலை.
வளையாபாளையம்- காதல் மனைவியுடன் தகராறு இளைஞர் தற்கொலை. கரூர் மாவட்டம் , புகலூர் தாலுக்கா , அத்திப்பாளையம் அருகே உள்ள வளையா பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி வயது 24 . இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சரண்யா வயது 21 என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் விரக்தி அடைந்த கிருஷ்ணமூர்த்தி ஜூலை 22ஆம் தேதி மாலை 6:30- மணி அளவில் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து அவரது மனைவி சரண்யா அளித்த புகாரில் உயிரிழந்த கிருஷ்ணமூர்த்தி உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவகிடங்குக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் க.பரமத்தி காவல்துறையினர்.
Next Story




