சூளகிரி அருகே கல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

X
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள நல்லகானகொத்தப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தராஜ் மற்றும் வருவாய்த்துறையினர். நல்லகானகொத்தப்பள்ளி பகுதியில் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் உரிய அனுமதி இன்றி ஒரு யூனிட் கற்களை கொண்டு செல்வது தெரியவந்தது. இதை அடுத்து கற்களுடன் டிராக்டரை பறிமுதல் செய்த அதிகாரிகள் சூளகிரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் சூளகிரி அருகே நஞ்சாபுரத்தை சேர்ந்த டிரைவர் குமார்(24) மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

