உங்களுடன் ஸ்டாலின்முகாம்

X
Komarapalayam King 24x7 |24 July 2025 9:10 PM ISTகுமாரபாளையத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது.
மிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட 4,5,6 ஆகிய வார்டுகளுக்கு இரண்டாம் கட்டமாக உழவர் சந்தை எதிரில் உள்ள தேவாங்கர் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது. நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமை வகித்தார். இதில் நகராட்சி நிர்வாகத்துறை, வருவாய் துறை, மின்சார துறை, மருத்துவத்துறை, ஆதிராவிடர் நலத்துறை, சமூக நலத்துறை, சிறப்பு திட்ட செயலாக்கு துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, தொழிலாளர் நலத்துறை, ஆதார் மையங்கள், இ சேவை மையங்கள் உள்ளிட்ட 13 துறைகள் மூலம், , நகராட்சி சொத்து வரி குடிநீர் வரி பெயர் மாற்றம்,கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, முதியோர், விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்ட ஒரு உதவி தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா, சாலையோர வியாபாரிகள் அடையாள அட்டை, மருத்துவ காப்பீடு அட்டை, புதிய ரேஷன் கார்டு, ஆதார் அட்டை , மருத்துவ முகாம் உள்ளிட்ட 43 வகையான சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இம்முகாமில் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சம் 45 நாட்களுக்குள் அவர்களது மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொண்டனர். இம்முகாமில் மனு செய்த சில மணி நேரத்தில் மருத்துவ காப்பீடு அட்டை, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் அட்டை, சாலையோர வியாபாரிகள் அடையாள அட்டை உள்ளிட்டவை உடனடியாக வழங்கப்பட்டது. இம்முகாமில் நகர மன்ற உறுப்பினர்கள் இனியாராஜ், சுமதி சந்திரன், புஷ்பா ஆறுமுகம் வட்டாட்சியர் சிவகுமார், நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், மாவட்ட திமுக மாணவர் அணி துணை அமைப்பாளர் ஐயப்பன், நகர இளைஞரணி அமைப்பாளர் விக்னேஷ், வார்டு செயலாளர்கள் மணிகண்டன், சசிகுமார், சீனிவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Next Story
