கற்றல் திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கு தொழில் கல்வி பாடப் பிரிவுகளில் சேர சிறப்பு முகாம்

X
2024-2025 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள கற்றல் திறன் குறைபாடுடைய மற்றும் மனநலம் சார்ந்த பிரச்சனைகளால் குறிப்பிட்ட பாடங்களில் விலக்களிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி மாணாக்கர்கள் உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி பாடங்களாகிய பிட்டர், டர்னர், மெசினிஸ்ட், எலக்ட்ரீசியன், மெக்கானிக் டிராக்டர், இண்டீரியர் டிசைன் அண்டு டெக்கரேசன், கேட்டரிங் மற்றும் உணவு சார்ந்த படிப்பு, மெக்கானிக் எலக்டிரிக் வெகிக்கிள், இண்டஸ்டிரியல் ரோபாடிக்ஸ் அண்டு டிஜிட்டல் மார்க்கட்டிங், அட்வான்ஸ்டு சி.என்.சி மெசினிங் அண்டு டெக்னீசியன் ஆகிய பாடப்பிரிவுகளில் சேருவதற்கான சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 25-07.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணியளவில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது, அதில் கற்றல் திறன் குறைபாடுடைய மற்றும் மனநலம் சார்ந்த பிரச்சனைகளால் குறிப்பிட்ட பாடங்களில் விலக்களிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி மாணாக்கர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
Next Story

