வேளாண் துறையினருக்கு பயிர் அறுவடை பரிசோதனை புத்தூட்டப் பயிற்சி 

வேளாண் துறையினருக்கு பயிர் அறுவடை பரிசோதனை புத்தூட்டப் பயிற்சி 
X
பயிற்சி
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை கோட்ட அளவிலான வேளாண் துறை மற்றும் தோட்டக்கலை அலுவலர்களுக்கான பயிர் அறுவடை பரிசோதனை மேற்கொள்வதற்கான புத்தூட்டப் பயிற்சி புதன்கிழமை அன்று பட்டுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.  தஞ்சாவூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் வித்யா, மத்திய திட்ட வேளாண் துணை இயக்குநர்  மாலதி ஆகியோர் துவக்கி வைத்தனர். தஞ்சாவூர் மாவட்ட புள்ளியியல் துணை இயக்குநர்  ரா.ஆறுமுகம் தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை கோட்ட புள்ளியியல் உதவி இயக்குநர் க.பாஸ்கரன் பயிற்சி அளித்தார். பயிற்சிக்கான முன்னேற்பாடுகளை புள்ளியியல் ஆய்வாளர்கள் சிவகுருநாதன், ஷ்யாமளா ஆகியோர் மேற்கொண்டனர். இப்பயிற்சியில் பட்டுக்கோட்டை கோட்டத்தை சேர்ந்த வேளாண் அலுவலர்கள், துணை வேளாண் அலுவலர்கள், தோட்டக்கலை அலுவலர்கள், உதவி வேளாண் அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள், கரும்பு அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர். இப்பயிற்சியில் பொது பயிர் மதிப்பீட்டாய்வு மற்றும் பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா ஆகிய திட்டங்களின் கீழ் பயிர் அறுவடை பரிசோதனைகள் மேற்கொள்வது குறித்து விரிவான அளவில் பயிற்சி அளிக்கப்பட்டது.
Next Story