ஏமாற்றுப் பேர்வழிகளிடம் மாணவர்கள், பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்க ஆட்சியர் அறிவுறுத்தல்

ஏமாற்றுப் பேர்வழிகளிடம் மாணவர்கள், பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்க ஆட்சியர் அறிவுறுத்தல்
X
ஆட்சித்தலைவர்
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,  அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் உயர்கல்வியில் சேருவதற்கு நான் உதவி செய்கிறேன் என்றோ, தொண்டு நிறுவனங்கள் மூலம் உதவி செய்கிறோம் என்றோ தெரிவித்துக் கொண்டு, அசல் கல்வி சான்றுகளையோ நன்கொடை என்ற பெயரில் பணமாகவோ மாணவர்களிடமோ, பெற்றோர்களிடமோ நேரடியாகவோ அல்லது தொலைப்பேசி வாயிலாகவோ தொடர்பு கொண்டால் அதனை நம்ப வேண்டாம்.  அவ்வாறு தொடர்பு கொள்பவர்கள் ஏமாற்று நபர்களாகவோ இருக்கலாம். மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதுபோன்ற ஏமாற்று நபர்களிடமிருந்து அழைப்புகள் எதும் பெறப்பட்டாலோ, நேரில் தொடர்பு கொண்டாலோ இது குறித்த வழிகாட்டுதல்களுக்கும். சந்தேகங்களுக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்டக் கட்டுப்பாட்டு அறையின் 8122844843, 8122605089, 8122675089, 8122575089 போன்ற தொடர்பு எண்களுக்கோ அல்லது நேரடியாகவோ தொடர்பு கொண்டு தெளிவு பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.
Next Story