மருத்துவக்கல்லுாரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த மருத்துவ மாணவர் கைது

X
தஞ்சாவூர், மருத்துவக்கல்லூரியில், மருத்துவர் அல்லாத மருத்துவம் சார்ந்த பட்டயப் படிப்பில், பயிலும் மாணவிக்கு, கடந்த சில நாட்களுக்கு முன்பு, அங்கு பயிலும் முதுநிலை மருத்துவப் படிப்பு படித்து வந்த மாணவர் கோபிநாத் (35), பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனால், பாதிக்கப்பட்ட மாணவி, விசாகா கமிட்டிக்கு புகார் மனு அனுப்பினார். ஆனால், இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி, கடந்த ஜூலை 21 ஆம் தேதி, நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து, மருத்துவக்கல்லூரி முதல்வர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கல்லூரி முதல்வர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன், மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதன் தொடர்ச்சியாக விசாகா கமிட்டி பரிந்துரையின் படி, மாணவர் கோபிநாத்தை கல்லூரியில் இருந்து, இடைநீக்கம் செய்ய, கல்லூரி முதல்வர் பாலசுப்பிரமணியன் உத்தரவிட்டார். இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின், அடிப்படையில், தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி காவல்துறையினர், கோபிநாத் மீது, பெண் வன்கொடுமைச் சட்டத்தின் கீ்ழ் வழக்குப் பதிவு செய்து புதன்கிழமை அவரை கைது செய்தனர்.
Next Story

