பட்டுக்கோட்டையில், கே.எஸ்.அச்சுதானந்தன் மறைவையொட்டி அஞ்சலி   

பட்டுக்கோட்டையில்,  கே.எஸ்.அச்சுதானந்தன் மறைவையொட்டி அஞ்சலி    
X
அஞ்சலி
சுதந்திரப் போராட்டத் தியாகியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரும், கேரள மாநில முன்னாள் முதல்வருமான கே.எஸ்.அச்சுதானந்தன் மறைவையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாட்டில் வீரவணக்கம், செவ்வஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. இதில், இந்தியக் கம்யூனிஸ்ட் மாவட்ட நிர்வாகி சி.பக்கிரிசாமி, எம்.எம்.சுதாகர், காங்கிரஸ் நிர்வாகிகள் வழக்குரைஞர் ராமசாமி, ரவிக்குமார், திமுக தலைமைக் கழக பேச்சாளர் மணிமுத்து, சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கு.பெஞ்சமின், ரெ.ஞானசூரியன், ஜீவானந்தம், முருக.சரவணன், மோரிஸ் அண்ணாதுரை, சிஐடியு என்.கந்தசாமி கிளைச் செயலாளர்கள் நம்பிவயல் மூக்கையன், சிவகாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
Next Story