கோவை: ஆழியார் அணையில் இருந்து உபரி நீர் திறப்பு!

ஆழியார் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணை 120 அடி கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1077 கன அடி நீர் வரத்து உள்ளதால், பாதுகாப்பு காரணமாக மூன்று மதகுகள் மூலம் 1329 கன அடி உபரி நீர் வெளியேற்றம் செய்யப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து ஆற்றங்கரை பகுதிகளில் உள்ள மக்கள் ஆற்றில் இறங்குவதும், குளிப்பதும், துணி துவைப்பதும், கால்நடைகளை கொண்டு செல்வதும் தவிர்க்குமாறு நீர்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கையில் இன்று ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story