உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பரபரப்பு

X
உளுந்துார்பேட்டையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மரக்கன்றுகளை வழங்காமல் அலட்சியமாக செயல்பட்ட வேளாண் அலுவலர்களை எம்.எல்.ஏ., கண்டித்ததால் பரபரப்பு நிலவியது. உளுந்துார்பேட்டை நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. முகாமிற்கு, நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு, துணைத் தலைவர் வைத்தியநாதன் தலைமை தாங்கினர். முகாமை பார்வையிட்ட மணிகண்ணன் எம்.எல்.ஏ., பொதுமக்கள் அளித்த மனுக்கள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மருத்துவ முகாமில் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார்.பின் புறப்பட்டு வெளியே செல்லும்போது வேளாண் அலுவலர்கள் துறை தொடர்பாக பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறியாமல் இருந்ததைப் பார்த்து, 'எதுவும் செய்யாமல் இப்படி உட்கார்ந்து இருந்தால் எப்படி. முகாமிற்கு வருபவர்களுக்கு மரக்கன்று வழங்காமல் என்ன செய்கிறீர்கள்' என கண்டித்தார். அதன் பின்னரே வேளாண் அலுவலர்கள் மரக்கன்றுகளை எடுத்து வந்து விநியோகித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. முகாமில், நகராட்சி கமிஷனர் புஷ்ரா, தாசில்தார் ஆனந்தகிருஷ்ணன், ஒன்றிய சேர்மன் ராஜவேல், மாவட்ட கவுன்சிலர் பாண்டியன், கவுன்சிலர்கள் கோபி, ராஜேஸ்வரி சரவணன், பிரதீப்ராஜா, வருவாய் துறை, மருத்துவ துறை, நகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
Next Story

