காவேரிப்பாக்கம்:நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

X
காவேரிப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தெருக்களில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக இருந்தன. ஒருசில நேரத்தில் தெரு நாய்கள் மனிதர்களை கடிப்பதால், ரேபிஸ் நோய் ஏற்படும் அபாயம் எழுந்தது. எனவே தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும், என பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. கால் நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள், பேரூராட்சி ஊழியர்களுக்கு வலைகளை விரித்து நாய்களை பிடிக்க பயிற்சி அளித்தனர். காவேரிப்பாக்கம் கால்நடை மருத்துவர் ஹரிஹரன் தலை மையில் பேரூராட்சி ஊழியர்கள் தெருநாய்களை பிடித்து தடுப்பூசி போடும் முதற்கட்ட பணியை தொடங்கினர். தெருக்கள் மற்றும் குடியிருப்புகளில் சுற்றித்திரிந்த தெரு நாய்களை பிடித்து ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடந்தது. மேலும் தொடர்ந்து பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்துப் பகுதி களிலும் அடுத்தடுத்து தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப் படும் என கால்நடை மருத்துவர் தெரிவித்தார். தெரு நாய்களுக்கு தடுப்பூசி போட்டதும் அடையாளமாக நாயின் உடலில் பெயிண்ட் பூச்சு ஸ்பிரே செய்யப்பட்டது. அப்போது பேரூராட்சி மன்ற தலைவர் லதாநரசிம்மன், பேரூ ராட்சி செயல் அலுவலர் லோகநாதன் மற்றும் பேரூராட்சி ஊழி யர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.
Next Story

