ராணிப்பேட்டையில் சுவரில் துளையிட்டு திருடிய வாலிபர்கள் கைது

X
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம்- திருமால்பூர் ரோட்டு தெருவை சேர்ந்தவர் அக்பர் (வயது 40). இவர் அதேப்பகுதியில் பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்கும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்து வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்றார். பின்னர் நேற்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பின்புற சுவரில் துளையிடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.பின்னர் கடைக்குள் சென்று பார்த்தபோது கல்லாவில் இருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பழைய இரும்பு பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றது. தெரியவந்தது. இதுகுறித்து நெமிலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில் போலீ சார் நேற்று பனப்பாக்கம் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது பனப்பாக்கம் சிப்காட் அருகே சந்தேகப் படும் வகையில் சுற்றித்திறிந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிரியா குமார் (22), சுன்குபுயா (39) என்பதும், இரும்பு கடையில் பணம், இரும்பு பொருட்களை திருடியதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story

