ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொழுநோய் கண்டறியும் முகாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொழுநோய் கண்டறியும் முகாம்
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறையின் கீழ் தேசிய தொழுநோய் தடுப்பு திட்டத்தின் சார்பாக தீவிர தொழு நோய் கண்டறியும் முகாம் நடத்தப்படுகிறது. ராணிப்பேட்டை மாவட்டம் புதுப்பாடி, லாலாபேட்டை, ஆற்காடு மற்றும் அரக்கோணம் நகரப்பகுதிகளில் வருகிற 1-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை 448 தன்னார்வலர்கள், 49 சுகாதார பணியாளர்கள் 1,21,700 வீடுகளில் உள்ள 4,86,802 நபர்களை நேரில் சென்று பரிசோதித்து தொழுநோய் கண்டறியும் பணியில் ஈடுபட உள்ளனர். பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும், அறிகுறிகள் தென்படும் நபர்கள் தொழு நோய் பற்றி பயப்பட தேவையில்லை எனவும், தொடர்ந்து 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை சிகிச்சை மேற்கொண்டால் நோயிலிருந்து முற்றிலுமாக விடுபடலாம் என மருத்துவ பணி கள் துணை இயக்குனர் (தொழுநோய்) பீரத்தா தெரிவித்துள்ளார். தொழுநோய் பரிசோதனை பள்ளி குழந்தைகளுக்கும் மருத்து வக் குழு மூலமாக மேற்கொள்ளப்பட உள்ளது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளிலும் இதற்கான சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என ஆட்சியர் சந்திரகலா தெரிவித்தார்.
Next Story