தர்மபுரியில் ஓய்வூதியர்கள் போராட்டம்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரி ஓய்வூதியர்கள் மனித சங்கிலி போராட்டம்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாவட்ட தலைநகரங்களில் இன்று தமிழக ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் இருந்து நெசவாளர் காலனி வரை இன்று காலை 10.30 மணிக்கு ஓய்வூதியர்கள் சங்கம் சார்பாக அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து நெசவாளர்காலனியில் போராட்டம் நிறைவடைந்தது இதில் நூற்றுக்கணக்கான ஓய்வூதியர்கள் பங்கேற்றனர்
Next Story