ராமநாதபுரம் நகராட்சி கூட்டத்திலிருந்து திமுக கவுன்சிலர் வெளிநடப்பு

புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை ஏலம் விட்டதில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டி ஆளுங்கட்சி கவுன்சிலர் ராமசுப்பிரமணியன் 21 நகர்மன்ற உறுப்பினர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு
ராமநாதபுரம் மாவட்டம் புதிய பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டுள்ள கடைகளை ஏலம் விட்டதில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம் சாட்டிய திமுக கவுன்சிலர் நகர்மன்ற கூட்டத்தை புறகணித்து வெளிநடப்பு செய்தார். அவரைத் தொடர்ந்து பாஜக கவுன்சிலர் கடைகள் ஏலம் தொடர்பாக சரமாரி கேள்வி எழுப்பியதையடுத்து நகர்மன்ற கூட்டம் விரைந்து முடித்து வைக்கப்பட்டது. ராமநாதபுரம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளது. இந்த 33 வார்டுகளில் உள்ள கவுன்சிலர்களுக்கான மாதாந்திர நகர்மன்ற கூட்டம் இன்று ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நகர் மன்ற தலைவர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக கவுன்சிலர் அய்யனார் ராமநாதபுரம் புதிய பேருந்து நிலைய புணரமைத்து புதிய கடைகள் கட்ட ரூ.20 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில் பேருந்து நிலையத்திற்குள் கட்டப்பட்ட 82 கடைகளுக்கான ஏலம் ராமநாதபுரம் நகராட்சி மூலம் டெண்டர் முறையில் கடந்த வாரம் ஏலம் ஏலம் விட்டதில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டினார். மேலும்,முறைகேடாக நடந்த ஏலத்தை உடனடியாக ரத்து செய்து மறு ஏலம் நடத்த வேண்டும், மாவட்ட நிர்வாகம் ஏலத்தில் நடைபெற்ற முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி நகர்மன்ற கூட்டத்தை புறகணித்து வெளிநடப்பு செய்தார். அவரைத் தொடர்ந்து பாஜக கவுன்சிலர் குமார் கடை ஏலம் விட்டதில் முறைகேடு நடந்திருப்பதாக நகர்மன்ற தலைவரிடம் சரமாரி கேள்விகளை எழுப்பியதையடுத்து திமுக கவுன்சிலர்களுக்கும் பாஜக கவுன்சிலருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்ல் ஏற்பட்டதையடுத்து விரைந்து நகர்மன்ற மன்ற கூட்டத்தை முடித்துக் கொண்டனர். ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டுள்ள 81 கடைகளை ஏலம் விட்டதில் ராமநாதபுரம் மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா பணத்தை பெற்றுக்கொண்ட முறை கேடாக ஏலம் நடத்தியதாக எதிர்க்கட்சி உட்பட பல அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் தற்போது ஆளுங்கட்சி கவுன்சிலர் அதே குற்றச்சாட்டை முன்வைத்து நகர்மன்ற கூட்டத்தை புறகணித்து வெளிநடப்பு செய்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
Next Story